தமிழ் உதி யின் அர்த்தம்

உதி

வினைச்சொல்உதிக்க, உதித்து

 • 1

  (சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவை கண்ணுக்குப் புலனாகும்படி வானத்தில்) தோன்றுதல்.

  ‘கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இது நடக்காது’
  ‘வானில் ஒரே ஒரு நட்சத்திரம் உதித்திருந்தது’

 • 2

  (மனத்தில் எண்ணம்) தோன்றுதல்.

  ‘காயமடைந்தவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஒருவருக்கும் உதிக்கவில்லை?’
  ‘அவரிடம் உதவி கேட்கலாம் என்ற எண்ணம் உதித்ததும் நான் அவரைப் பார்க்கப் போனேன்’

 • 3

  (மகான்களைக் குறிக்கையில்) பிறத்தல்.

  ‘பல மகான்கள் உதித்த பூமி இது’