தமிழ் உதிரி யின் அர்த்தம்

உதிரி

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றோடு ஒன்று இணையாமல்) தனித்தனியாக இருப்பது.

  ‘உதிரிப் பூக்கள்’
  ‘உதிரிஉதிரியாகப் பருக்கைகள்’

 • 2

  குறிப்பிட்ட எந்த வகைக்குள்ளும் அடங்காதது.

  ‘உதிரிச் செலவுகள்’

 • 3

  (நிலையான வருவாயைத் தராத) சில்லறை (வேலைகள்).

  ‘வேளாண்மையை முற்றிலும் இயந்திரமயமாக்குவது விவசாயக் கூலிகளுக்குக் கிடைக்கும் உதிரி வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும்’