உதை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உதை1உதை2

உதை1

வினைச்சொல்உதைக்க, உதைத்து

 • 1

  (காலை) முன்னும் பின்னும் பலமாக உதறுதல்.

  ‘குழந்தை காலை உதைத்துக்கொண்டு அழுதது’

 • 2

  (காலால்) பலமாகத் தள்ளுதல்; எற்றுதல்.

  ‘உதைத்த பந்து உயரே எழும்பியது’
  ‘மாடு யாரையும் அருகில் வரவிடாமல் உதைக்கிறது’

 • 3

  (இரண்டு சக்கர வண்டியைக் கிளப்புவதற்காகக் காலால்) பலத்துடன் அழுத்துதல்.

  ‘பலமுறை உதைத்த பின்தான் மோட்டார் சைக்கிள் கிளம்பியது’

 • 4

  அடியும் உதையும் கொடுத்தல்.

  ‘பணத்தைத் தொலைத்துவிட்டதைச் சொன்னால் வீட்டில் என்னை உதைப்பார்கள்’
  ‘இப்படியே எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்தால் உன்னை உதைப்பேன்’

 • 5

  பேச்சு வழக்கு (கணக்கு, செய்தி போன்றவை) முரண்படுதல்.

  ‘எப்படிக் கூட்டினாலும் கணக்கு எங்கோ உதைக்கிறது’
  ‘அவன் சொன்னதில் ஏதோ ஒன்று உதைக்கிறது’

 • 6

  (ஒரு செயலைச் செய்வதில்) தடுமாறுதல்.

  ‘நான் தமிழ் எழுதும்போது இலக்கணம் சற்று உதைக்கும்’
  ‘அவருடைய படங்களில் உச்சகட்டக் காட்சிகள் எப்போதும் உதைக்கும்’

 • 7

  பேச்சு வழக்கு பற்றாக்குறை ஏற்படுதல்.

  ‘இந்த வீட்டை விலைக்கு வாங்கிவிட்டால் பின்னால் மாதாமாதம் கணிசமான தொகை உதைக்குமே!’

 • 8

  பேச்சு வழக்கு (மனசாட்சி) உறுத்துதல்; (உள்ளூர) பயப்படுதல்.

  ‘குற்ற உணர்வால் அவருக்கு உதைத்தது’
  ‘உண்மையைப் பிட்டுப்பிட்டு வைக்க ஆரம்பித்ததும் அவருக்கு உதைத்தது’

உதை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உதை1உதை2

உதை2

பெயர்ச்சொல்

 • 1

  (காலால் தரும்) பலத்த அடி.

  ‘கழுதையின் உதையைத் தாங்க முடியாமல் நாய் அலறியது’

 • 2

  (அறையும் எற்றும் சேர்ந்த) அடி.

  ‘பெண்களைச் சீண்டிய இளைஞர்களுக்கு உதை கிடைத்தது’