தமிழ் உந்து யின் அர்த்தம்

உந்து

வினைச்சொல்உந்த, உந்தி

 • 1

  (முன்னோக்கி வேகமாக நகர்வதற்கு வசதியாகத் தரையில்) முன் காலால் அழுத்துதல்.

  ‘அவள் ஊஞ்சலை உந்தி ஆடும் காட்சி பார்க்க அழகாக இருந்தது’

 • 2

  (காற்று) முன்னோக்கித் தள்ளுதல்.

  ‘பாய்மரக் கப்பல்கள் காற்றால் உந்தப்படுகின்றன’

 • 3

  (ஒன்றைச் செய்ய) தூண்டுதல்.

  ‘மேல்படிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவனை உந்தியது’
  ‘வீம்பினால் உந்தப்பட்டு இதில் இறங்கியிருக்கிறான்’