தமிழ் உப யின் அர்த்தம்

உப

பெயரடை

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு முக்கியப் பகுதியாக அமையாதது; துணை; கிளை.

  ‘மகாபாரதத்தின் பல உப கதைகளுள் இதுவும் ஒன்று’
  ‘கேள்வி நேரத்தின்போது சில உப கேள்விகளுக்கும் அமைச்சர் பதில் அளித்தார்’

 • 2

  அருகிவரும் வழக்கு பதவிப் பொறுப்பில் இரண்டாவது நிலையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவது; துணை.

  ‘உப ஜனாதிபதி’
  ‘உப தலைவர்’