தமிழ் உபகரணம் யின் அர்த்தம்

உபகரணம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு தொழிலைச் செய்வதற்குத் தேவையான கருவி.

  ‘அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள்’
  ‘அறிவியல் ஆய்வுக்கூடத்துக்கு உபகரணங்கள் வாங்கப் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது’
  ‘கோழி வளர்ப்புக்குத் தேவையான உபகரணங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தேன்’

 • 2

  பயன்பாட்டுக்கான சாதனம்.

  ‘மின்விசிறி, அரவை இயந்திரம் போன்ற உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை’