தமிழ் உபசரி யின் அர்த்தம்

உபசரி

வினைச்சொல்உபசரிக்க, உபசரித்து

  • 1

    (விருந்தாளிகளை) வரவேற்று (மரியாதையுடன்) கவனித்துத் தேவையானவற்றைச் செய்தல்.

    ‘எங்கள் எல்லோரையும் நாற்காலியில் இருக்கச் சொல்லி மோர் கொடுத்து உபசரித்தார்’
    ‘பத்திரிகைக்காரர்களாகிய எங்களை அவர் உபசரித்த விதம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது’

  • 2

    (விமானம் போன்றவற்றில்) பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்துதந்து கவனித்துக்கொள்ளுதல்.