தமிழ் உபத்திரவம் யின் அர்த்தம்

உபத்திரவம்

பெயர்ச்சொல்

 • 1

  (வேலைக்கு அல்லது நிம்மதிக்கு ஏற்படும்) இடைஞ்சல்.

  ‘நீ எனக்கு உதவி செய்ய வேண்டாம். உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும்’

 • 2

  தொல்லை.

  ‘பக்கத்து வீட்டுக்காரரின் உபத்திரவம் தாங்காமல்தான் நான் வீட்டை மாற்றிக்கொண்டேன்’

 • 3

  உடல் உபாதை.

  ‘வெயில் காலத்தில் வேர்க்குரு உபத்திரவம்’
  ‘மூல உபத்திரவத்தால் அவதிப்படுபவர்கள் தினமும் கீரை சாப்பிடுவது நல்லது’