வினைச்சொல்
- 1
ஊதிப் பெருத்தல்.
‘எண்ணெயில் போட்டதும் பூரி உப்பியது’‘ஏதோ ஒரு வியாதியால் அவருக்கு வயிறு உப்பியிருக்கிறது’ - 2
வீங்குதல்.
‘அழுது உப்பிய கண்களுடன் வந்தாள்’
பெயர்ச்சொல்
- 1
(கடல் நீரைக் காய்ச்சியோ நிலத்திலிருந்து வெட்டியோ எடுக்கப்படும்) கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகப் பொருள்.
- 2
உப்பின் சுவை; கைப்பு.
‘இந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை; ஒரே உப்பு!’ - 3
வேதியியல்
அமிலமும் காரமும் சேர்ந்து ஏற்படும் மாற்றத்தால் கிடைக்கும் படிக வடிவப் பொருள்.