தமிழ் உபயம் யின் அர்த்தம்

உபயம்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலுக்குப் பொருளாகவோ பணமாகவோ கொடுக்கப்படும்) நன்கொடை; (கோயில் பூஜை, விழா போன்றவற்றுக்காக ஏற்றுக்கொள்ளும்) செலவு.

    ‘கோயிலுக்கு மின் விளக்குகள் நகைக் கடைக்காரரின் உபயம்’
    ‘இன்றைய உற்சவம் யாருடைய உபயம்?’