தமிழ் உபயோகம் யின் அர்த்தம்

உபயோகம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  குறிப்பிட்ட தேவையை நிறைவேற்றக்கூடியது; பயன்.

  ‘கிராமத்தில் சாணம்கூட உபயோகமான பொருளாகிவிடுகிறது’
  ‘தினசரி உபயோகத்திற்காக நூல் புடவைகள் வாங்கினாள்’

 • 2

  பயன்பாடு.

  ‘பல சமஸ்கிருதச் சொற்கள் இப்போது தமிழில் உபயோகத்தில் இல்லை’

 • 3

  நன்மை; வசதி.

  ‘அவனால் உபயோகம் இல்லை, உபத்திரவம்தான்’