தமிழ் உபயோகி யின் அர்த்தம்

உபயோகி

வினைச்சொல்உபயோகிக்க, உபயோகித்து

 • 1

  (தேவையை, நோக்கத்தை நிறைவேற்ற ஒன்றை) பயன்படுத்துதல்.

  ‘தண்ணீரை அளவாக உபயோகிக்க வேண்டும்’
  ‘பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரங்களையே உபயோகிக்கிறார்கள்’
  ‘அவர் தன் செல்வாக்கை உபயோகிக்கத் தயங்குகிறார்’
  ‘கொஞ்சம் மூளையை உபயோகித்தால் இந்தக் கணக்கை எளிதில் போட்டுவிடலாம்’