தமிழ் உபரி யின் அர்த்தம்

உபரி

பெயர்ச்சொல்

 • 1

  தேவைக்குப் போக எஞ்சியிருப்பது; தேவைக்கு மேல் கிடைப்பது.

  ‘கங்கை ஆற்றின் உபரி நீரைத் தெற்கே கொண்டுவரலாம்’
  ‘மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது’

 • 2

  கூடுதல்.

  ‘அவர் உபரியாகச் சில விளக்கங்கள் தந்தார்’
  ‘செலவு போக உபரியாக இருந்த பணம் அனைவருக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்பட்டது’

 • 3

  (கிரிக்கெட் ஆட்டத்தில்) பந்து வீச்சாளர் முறையாகப் பந்து வீசாததால் எதிரணி பெறும் கூடுதல் ஓட்டம்.

  ‘இந்த ஆட்டத்தில் உபரியாகத் தந்த ஓட்டங்கள் மட்டுமே இருபது ஆகும்’
  ‘இந்தியப் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து உபரிகளை வாரி வழங்கிய வண்ணம் இருந்தனர்’