தமிழ் உபாதை யின் அர்த்தம்

உபாதை

பெயர்ச்சொல்

 • 1

  (வலி, நோய் போன்றவற்றால் ஏற்படும்) அசௌகரியம்.

  ‘வயிற்றுவலி என்கிறீர்களே, எத்தனை நாளாக உங்களுக்கு இந்த உபாதை இருக்கிறது?’
  ‘வாயு உபாதை’

 • 2

  தொல்லை.

  ‘ரயில் பயணத்தின்போது மூட்டைக் கடி உபாதை தாங்கமுடியவில்லை’
  ‘கடன் உபாதையிலிருந்து விடுபட முடியவில்லை’