தமிழ் உபாயம் யின் அர்த்தம்

உபாயம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு செயலை நிறைவேற்ற அல்லது ஒரு கருத்தைத் தெரிவிக்க மேற்கொள்ளும்) வழிமுறை; சாதனம்.

  ‘நோயாளியைக் காப்பாற்றத் தனக்குத் தெரிந்த எல்லா உபாயங்களையும் மருத்துவர் கையாண்டுபார்த்தார்’
  ‘அபிநயம் என்பது ஒரு கருத்தை எடுத்துச் சொல்லுவதற்கான உபாயம்’

 • 2

  தந்திரம்.

  ‘சிங்கத்திடமிருந்து தப்பிக்க நரி ஓர் உபாயம் செய்தது’
  ‘நண்பர்களைப் பிரிக்க அவன் கையாளும் உபாயங்களில் இதுவும் ஒன்று’