தமிழ் உமிழ் யின் அர்த்தம்

உமிழ்

வினைச்சொல்உமிழ, உமிழ்ந்து

 • 1

  துப்புதல்.

  ‘அவர் வாயிலிருந்த புகையிலைச் சாற்றை உமிழ்ந்துவிட்டுப் பேசத் தொடங்கினார்’

 • 2

  (ஒளி, வெப்பம் முதலியவற்றைச் சிறிதுசிறிதாக) வெளிவிடுதல்.

  ‘மின்மினிப் பூச்சிகள் ஒளி உமிழ்ந்தபடி பறந்து திரிந்தன’
  ‘ஒளி உமிழும் கண்கள்’
  ‘கோடைக் காலத்தில் தகரக் கூரை வெப்பத்தை உமிழ்ந்தது’
  உரு வழக்கு ‘பெற்ற தாயே மகன்மீது வெறுப்பை உமிழ்ந்தால் என்ன செய்வது?’