உயர -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உயர1உயர்2உயர்3

உயர1

வினையடை

உயர -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உயர1உயர்2உயர்3

உயர்2

வினைச்சொல்

 • 1

  (ஒன்று தன் நிலையிலிருந்து) மேல்நோக்கி எழும்புதல்.

  ‘விமானம் மெல்லமெல்ல மேலே உயர்ந்து சென்றது’
  ‘எல்லோரும் கைகளைத் தூக்கியதும் அவன் கையும் உயர்ந்தது’

 • 2

  (அளவு, விலை, மதிப்பு முதலியவை) அதிகரித்தல்; கூடுதல்.

  ‘அணையின் நீர்மட்டம் நேற்று பெய்த மழையால் மேலும் உயரும்’
  ‘உணவுப் பண்டங்களின் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது’
  ‘ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நூறாக உயர்ந்துவிட்டது’
  ‘அவர் மீது நான் கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது’
  ‘தேர்தலுக்குப் பிறகு கட்சியில் அவருடைய செல்வாக்கு கணிசமாக உயர்ந்தது’

உயர -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உயர1உயர்2உயர்3

உயர்3

பெயரடை

 • 1

  (மேலும் கீழும் நிலைகளாகப் பகுக்கக்கூடியதில்) மேல்.

  ‘உயர் படிப்பு’
  ‘உயர் அதிகாரி’

 • 2

  (தரத்தைக் குறிப்பிடுகையில்) சிறந்த.

  ‘உயர் ரக விதைகள்’
  ‘உயர் குணம்’