தமிழ் உயர்வு யின் அர்த்தம்

உயர்வு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (அளவு, விலை, மதிப்பு போன்றவற்றில்) அதிகரிப்பு; கூடுதல்.

  ‘விலைவாசி உயர்வுக்குத் தகுந்தபடி சம்பள உயர்வு இல்லை’
  ‘போக்குவரத்துக் கட்டண உயர்வு பொதுமக்களைப் பாதிக்கும்’

 • 2

  (பதவியில் குறிப்பிட்ட நிலையைவிட) அடுத்த மேல்நிலை.

  ‘திறமையின் அடிப்படையில் பதவி உயர்வு’

 • 3

  சிறப்பு.

  ‘தலைவர் உங்களைப் பற்றி உயர்வாகப் பேசினார்’
  ‘சொந்த வாழ்க்கையில் தமிழர்கள் தமிழுக்கு உயர்வான இடம் தர வேண்டும்’
  ‘தன்மதிப்பு மிக உயர்வான பண்பு’