தமிழ் உயர்த்து யின் அர்த்தம்

உயர்த்து

வினைச்சொல்உயர்த்த, உயர்த்தி

 • 1

  (உடல் உறுப்புகளை) கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குக் கொண்டுபோதல்.

  ‘யாரோ வரும் சத்தம் கேட்டுத் தலையை உயர்த்தினான்’
  ‘கையைச் சற்று உயர்த்திக் கடிகாரத்தைப் பார்த்தான்’
  ‘இந்த ஆசனத்தில் உடம்பை நேராக வைத்துப் படுத்த பிறகு, வயிற்றை மட்டும் உயர்த்த வேண்டும்’

 • 2

  (குறிப்பிட்ட) உயரத்திற்குக் கொண்டுவருதல்.

  ‘பள்ளத்தை நிரப்பிச் சாலையை உயர்த்தும் பணி நடைபெறுகிறது’

 • 3

  (அளவு, விலை, மதிப்பு முதலியவற்றை) அதிகப்படுத்துதல்.

  ‘விரைவுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுகிறது’
  ‘அவர் குரலை உயர்த்தியதும் எல்லோரும் அமைதியானார்கள்’
  ‘கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா?’

 • 4

  (ஒருவரை) புகழ்தல்; பாராட்டுதல்.

  ‘தனக்குப் பிடித்தவர்கள் என்றால் அவர்களை மிகவும் உயர்த்துவார்’