தமிழ் உயிர்ப்பி யின் அர்த்தம்

உயிர்ப்பி

வினைச்சொல்உயிர்ப்பிக்க, உயிர்ப்பித்து

  • 1

    (வழக்கற்றுப்போன ஒன்றை) மீண்டும் வழக்குக்குக் கொண்டுவருதல்; புதுப்பித்தல்.

    ‘முன்பு இருந்த சில நடன அடவுகளை இக்கலைஞர் உயிர்ப்பித்திருக்கிறார்’
    ‘பேச்சுவழக்கு இல்லாத மொழியை உயிர்ப்பிக்க முடியுமா?’
    ‘புராணங்களில் கடவுள் இறந்தவர்களை உயிர்ப்பிப்பார்’