தமிழ் உயிருக்கு உயிராக யின் அர்த்தம்

உயிருக்கு உயிராக

வினையடை

  • 1

    மிகுந்த அன்போடு.

    ‘என்னுடன் உயிருக்கு உயிராகப் பழகிய தோழியின் திருமணத்திற்குப் போக முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது’
    ‘தான் உயிருக்கு உயிராக வளர்த்த மகன் தன்னை மதிக்காமல் நடந்துகொள்வதால் அவர் மிகவும் வேதனைப்படுகிறார்’