தமிழ் உயிரை வைத்திரு யின் அர்த்தம்

உயிரை வைத்திரு

வினைச்சொல்-இருக்க, -இருந்து

 • 1

  (ஒன்றன் பொருட்டு) உயிர்வாழ்தல்.

  ‘உனக்காகத்தான் உயிரை வைத்திருக்கிறேன்’

 • 2

  (ஒன்றின் அல்லது ஒருவரின் மேல்) மிகுந்த அன்பு வைத்திருத்தல்; (ஒன்றை அல்லது ஒருவரை) மிக அதிகமாக நேசித்தல்.

  ‘அவர் தன் கடைசிப் பிள்ளையின் மேல் உயிரை வைத்திருந்தார்’
  ‘குழந்தை நாயிடம் உயிரை வைத்திருக்கிறது’