உயிர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உயிர்1உயிர்2

உயிர்1

வினைச்சொல்உயிர்க்க, உயிர்த்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (கருவாக) உருவாதல்; (உயிர்) தோற்றம் எடுத்தல்.

  ‘மனிதன் இம்மண்ணில் உயிர்த்திராத காலம் அது’

உயிர் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உயிர்1உயிர்2

உயிர்2

பெயர்ச்சொல்

 • 1

  (மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும்) ஆதாரமாக இருக்கும் சக்தி; ஜீவன்.

  ‘அடிபட்டுக் கிடந்தவனின் நாடியைப் பிடித்துப் பார்த்தேன். இன்னமும் உயிர் இருந்தது’
  உரு வழக்கு ‘கதையில் உயிரே இல்லை’

 • 2

  உயிரோடு இருந்து இனப்பெருக்கம் செய்யும் ஜீவராசி.

  ‘சந்திர மண்டலத்தில் உயிர்கள் இருப்பதற்கான சூழ்நிலை இல்லை’

 • 3

  (தாயின் கருப்பையில் இருக்கும்) சிசு.

  ‘பத்து மாதம் ஓர் உயிரைச் சுமக்கிறாள் தாய்!’

 • 4

  தீவிரமான விருப்பம்; கொள்ளைப் பிரியம்.

  ‘மாம்பழம் என்றால் அவருக்கு உயிர்’
  ‘நான் என்றால் பாட்டிக்கு உயிர்’
  ‘அவர் உன்மேல் உயிரையே வைத்திருக்கிறார்’

 • 5

  (பெரும்பாலும் பெயரடையாக) நெருக்கம்.

  ‘உயிர்த் தோழன்’

 • 6

  இலக்கணம்
  தடைபடாமல் குரல்வளையிலிருந்து வரும் ஒலி; உயிரெழுத்து.