தமிழ் உரக்க யின் அர்த்தம்

உரக்க

வினையடை

 • 1

  (பேசுதல், சிரித்தல், படித்தல் போன்ற செயல்களில்) குரல் ஒலி அதிகரிக்கும் வகையில்; அதிகச் சப்தத்துடன்.

  ‘பாடங்களை அவன் எப்போதும் உரக்கப் படித்துப் பழகியவன்’
  ‘பழம் விற்பவர் உரக்கக் கூவிக்கொண்டே சென்றார்’

 • 2

  அதிக அளவில்; தீவிரமாக.

  ‘மழை உரக்கப் பெய்தது’