தமிழ் உராய்வு யின் அர்த்தம்

உராய்வு

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றன்மீது மற்றொன்று இழுபட்டுத் தேய்வது.

    ‘மூங்கில்களின் உராய்வால் ஏற்பட்ட சப்தம்’

  • 2

    இயற்பியல்
    (இரண்டு பொருள்களின் பரப்புகள் ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில்) ஒன்றின் இயக்கத்திற்கு மற்றொரு பரப்பால் ஏற்படும் தடை.