உரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உரி1உரி2

உரி1

வினைச்சொல்உரிய, உரிந்து, உரிக்க, உரித்து

 • 1

  (உடம்பின் தோல், மரத்தின் பட்டை முதலியன) பிரிந்து வருதல்; நீங்குதல்.

  ‘பனிக் காலத்தில் சிலருக்கு உள்ளங்கைத் தோல் உரிய ஆரம்பிக்கும்’
  ‘மரத்தில் பட்டை உரிந்து தொங்கியது’

உரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உரி1உரி2

உரி2

வினைச்சொல்உரிய, உரிந்து, உரிக்க, உரித்து

 • 1

  (பழம், கிழங்கு போன்றவற்றின் தோலை அல்லது விலங்கின் தோல், மரத்தின் பட்டை முதலியவற்றை) நீக்குதல்; பிய்த்தல்.

  ‘வாழைப்பழத் தோலை உரிப்பது போன்ற சுலபமான வேலை இது’
  ‘பட்டை உரிக்கப்பட்டால் மரங்கள் பட்டுப்போகும்’
  ‘‘தோலை உரித்துவிடுவேன்’ என்று மிரட்டினான்’
  ‘பாம்பு சட்டை உரித்தது’

 • 2

  (பனை மட்டை, மட்டையோடு கூடிய தேங்காய் முதலியவற்றிலிருந்து நாரை) கிழித்தெடுத்தல்.

  ‘பனை மட்டையிலிருந்து நார் உரித்துப் பெட்டி முடைகிறார்கள்’

 • 3

  (சமைப்பதற்கு முன் கோழி முதலிய பறவைகளின் இறகுகளை) பிடுங்குதல்.

  ‘கோழியை உரித்துவிட்டு மஞ்சளைத் தடவு’