தமிழ் உரிமை யின் அர்த்தம்

உரிமை

பெயர்ச்சொல்

 • 1

  சட்டபூர்வமாக அல்லது நியாயத்தின் அடிப்படையில் ஒருவர் கோருவது/அப்படிக் கோருவதைச் சட்டமோ மரபோ அனுமதிப்பது.

  ‘குறிப்பிட்ட வயதுடையோர் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு’
  ‘சர்வாதிகார ஆட்சியில் முதலில் பறிக்கப்படுவது பேச்சுரிமை’
  ‘விவாகரத்து கோரும் உரிமை’
  ‘அத்தை மகளை மணக்கும் உரிமை’

 • 2

  (சட்டப்படி அல்லது நியாயப்படி அல்லாமல் ஒருவர் உறவாலோ நட்பாலோ) தன்னளவில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம்.

  ‘நண்பர் வீட்டுக் குடும்பச் சண்டையில் உரிமையோடு தலையிட்டேன்’
  ‘அவர் பல நாள் பழகியவர்போல் உரிமையோடு ஒருமையில் என்னை அழைத்துப் பேசினார்’

 • 3

  (ஒருவருக்கு) உரியது; சொந்தமானது.

  ‘நாம் இருக்கும் நாடு நமக்கே உரிமை’
  ‘இந்தச் சொத்துக்கு உரிமை உடையவர்’