தமிழ் உரிய யின் அர்த்தம்

உரிய

பெயரடை

 • 1

  இயல்பாக இருக்கிற அல்லது அமைந்த.

  ‘முகத்தில் அவருக்கே உரிய சிரிப்பு’
  ‘வெற்றிலை போட்டுப்போட்டுப் பற்களுக்கு உரிய வெண்மை இல்லை’

 • 2

  சொந்தமான; உரிமை உடைய.

  ‘அரசுக்கு உரிய நிலத்தில் வீடு கட்டக் கூடாது’
  ‘கண்டெடுத்த கைப்பையை உரிய நபரிடம் சேர்த்துவிட்டேன்’

 • 3

  தகுந்த; பொருத்தமான.

  ‘உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டது’
  ‘தவறு செய்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’
  ‘நீ தெரிவித்த கருத்து ஆய்வுக்கு உரிய ஒன்று’
  ‘என் அன்புக்கு உரிய மாணவன்’
  ‘அவர் மறைந்துவிட்டார் என்பது இரக்கத்திற்கு உரிய செய்தி’

 • 4

  ஏற்ற; உகந்த.

  ‘உனக்கு வேலை கிடைத்துவிட்டது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி’
  ‘இருட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிற்பது சந்தேகத்துக்கு உரிய செயலாகிவிடும்’
  ‘அனுதாபத்துக்கு உரிய முறையில் நின்றான்’

 • 5

  நிர்ணயிக்கப்பட்ட.

  ‘பொருளுக்கு உரிய விலையை எழுதி ஒட்டிவைக்க வேண்டும்’