தமிழ் உரு யின் அர்த்தம்

உரு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றை இன்னது என்று தெரிந்துகொள்வதற்கு உரிய) புற (அடையாள) தோற்றம்; புற வடிவ அமைப்பு.

  ‘விமானம் உருத் தெரியாதபடி சிதறிக்கிடந்தது’
  ‘மூர்க்கத்தின் மறு உருவாகக் காட்சியளித்தார் அவர்’
  ‘இரவுச் செய்தி பிற்பகல் செய்தியின் இன்னொரு உருவாகவே இருந்தது. புதிதாக ஒன்றும் இல்லை’
  ‘ஒரு அலைவரிசை ஒளிபரப்பியதையே இன்னொரு அலைவரிசை வேறு உருவில் தருகிறது’

 • 2

  உருவம்.

  ‘மனித உருவில் நடமாடும் மிருகம் அவன்’

 • 3

  தாலியில் கோக்கப்படும் தங்கத்தால் ஆன சிறு மணி.

  ‘தாலி உருக்கள் செய்ய எவ்வளவு தங்கம் வேண்டும்?’