தமிழ் உருக்கு யின் அர்த்தம்

உருக்கு

வினைச்சொல்உருக்க, உருக்கி

 • 1

  (வெண்ணெய், உலோகம் போன்றவற்றை வெப்பத்தின்மூலம்) இளகச் செய்தல்.

  ‘வாசத்தைக் கொண்டே வீட்டில் வெண்ணெய் உருக்குவதைக் கண்டுபிடித்துவிடலாம்’
  ‘இரும்பை உருக்கி இந்தச் சட்டத்தில் வார்க்கிறார்கள்’
  உரு வழக்கு ‘வெல்லம் நிறையச் சாப்பிட்டால் உடலை உருக்கிவிடுமாம்’

 • 2

  நெகிழச் செய்தல்.

  ‘அந்தச் சோகமான காட்சி அவனை அப்படியே உருக்கிவிட்டது’

தமிழ் உருக்கு யின் அர்த்தம்

உருக்கு

பெயர்ச்சொல்

 • 1

  எஃகு.

  ‘உருக்கின் பயனைப் பற்றி விவரிக்கவும் என்ற கேள்விக்கு நான் விளக்கமாக எழுதியுள்ளேன்’