உருக்குலை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உருக்குலை1உருக்குலை2

உருக்குலை1

வினைச்சொல்

 • 1

  நோய், கவலை போன்றவற்றால் மெலிந்துபோதல்.

  ‘நோயினால் அவன் உருக்குலைந்துபோய்விட்டான்’
  ‘வேலை கிடைக்காத ஏக்கமே அவனை உருக்குலைய வைத்துவிட்டது’

 • 2

  (ஒன்றின் உருவம்) சிதைதல்.

  ‘போர்க்களத்தில் பிணங்கள் உருக்குலைந்து கிடந்தன’
  ‘விபத்தில் சிக்கி உருக்குலைந்த வாகனம்’

உருக்குலை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உருக்குலை1உருக்குலை2

உருக்குலை2

வினைச்சொல்

 • 1

  நோய், கவலை போன்றவை ஒருவரை மெலிந்துபோகச் செய்தல்.

  ‘காசநோய் அவர் உடம்பைக் கடுமையாக உருக்குலைத்துவிட்டது’
  ‘மகனின் திடீர் மறைவு அவரை உருக்குலைத்திருப்பது தெரிகிறது’
  உரு வழக்கு ‘பணத்தாசையால் உருக்குலைக்கப்பட்ட வாழ்க்கை’

 • 2

  (சூறாவளி, பூகம்பம் போன்றவை கட்டடங்களை) சிதைத்தல்.

  ‘பூகம்பம் உருக்குலைத்த நகரத்தைச் சீர்படுத்துவதற்கு நாளாகும்’

 • 3

  (ஆவணங்களை) அழித்தல்.

  ‘சாட்சியமாகும் ஆவணத்தை உருக்குலைப்பது பெரும் குற்றம்’