தமிழ் உருகு யின் அர்த்தம்

உருகு

வினைச்சொல்உருக, உருகி

 • 1

  (வெண்ணெய், பனிக்கட்டி, உலோகம் போன்றவை வெப்பத்தினால்) இளகுதல்.

  ‘பனிக்கட்டி உருகி நீராக ஓடியது’
  ‘தொழிற்சாலையில் இரும்பு உருகிக் குழம்பாக ஓடியது’
  உரு வழக்கு ‘உடலும் உயிரும் உருகும்படி உணர்ச்சியுடன் பாடினாள்’

 • 2

  மனம் நெகிழ்தல்.

  ‘மற்றவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்தால் அவன் உருகிவிடுவான்’

 • 3

  (ஒருவரை நினைத்து) ஏங்குதல்.

  ‘அவளை நினைத்து உருகுவதை விட்டுவிட்டு உருப்படியாக ஏதாவது செய்யேன்’

 • 4

  (நோயால், கவலையால், வேலையால்) மெலிதல்.

  ‘கணவனுக்கு வேலை கிடைக்கவில்லையே என்ற கவலையால் உருகிப் பாதி ஆளாகிவிட்டாள்’