தமிழ் உருட்டித்திரட்டி யின் அர்த்தம்

உருட்டித்திரட்டி

வினையடை

  • 1

    (பணம், பொருள் முதலியவற்றை) இயன்ற வழிகளிலெல்லாம் சேர்த்து.

    ‘என்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் உருட்டித்திரட்டிப் பார்த்தாலும் ஆயிரம் ரூபாய்தான் தேறும்’
    ‘தன் மகளின் திருமணத்திற்குத் தேவையான நகைகளை உருட்டித்திரட்டி வைத்திருக்கிறாள்’