தமிழ் உருண்டை யின் அர்த்தம்

உருண்டை

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  கோள அல்லது குண்டு வடிவம்.

  ‘உலகம் உருண்டை என்பது எப்போதோ நிரூபிக்கப்பட்டுவிட்டது!’
  ‘ஆசிரியர் பந்தைக் காட்டி ‘இதன் வடிவம் உருண்டை’ என்று விளக்கினார்’

 • 2

  (பொருள்) சிறு கோள வடிவில் இருப்பது அல்லது செய்யப்பட்டிருப்பது.

  ‘வேர்க்கடலை உருண்டை’
  ‘களிமண் உருண்டை’
  ‘ஒரு உருண்டைச் சாதம்கூடக் குழந்தை சாப்பிடவில்லை’