தமிழ் உருத்து யின் அர்த்தம்

உருத்து

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு அக்கறை.

  ‘காமராஜருக்கு உண்மையிலேயே மாணவர்கள் மீது உருத்து இருந்ததால் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்’

தமிழ் உருத்து யின் அர்த்தம்

உருத்து

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு உறவு; சொந்தம்.

  ‘என் மகனின் கல்யாணத்துக்கு எல்லா உருத்துக்காரர்களும் வந்து வாழ்த்த வேண்டும்’
  ‘இது என் உருத்துக்காரருடைய காணி’
  ‘உருத்துக்காரர்களுக்குச் சொல்லி அனுப்பிவிட்டாயா?’