தமிழ் உருப்படியாக யின் அர்த்தம்

உருப்படியாக

வினையடை

 • 1

  (ஒருவருடைய) உயிருக்கு ஆபத்து இல்லாமல்.

  ‘பணம் போனால் போகட்டும். நீ உருப்படியாக வந்து சேர்ந்தாயே, அது போதும்’

 • 2

  (ஒரு பொருள்) சேதம் அடையாமல்.

  ‘இந்தக் கண்ணாடிச் சாமான்களை உருப்படியாக ஊருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்’

தமிழ் உருப்படியாக யின் அர்த்தம்

உருப்படியாக

வினையடை

 • 1

  பயனுள்ள விதத்தில்.

  ‘ஒரு காரியம் உருப்படியாகப் பண்ணத் தெரியாதா?’
  ‘அலுவலகத்திற்கு வந்ததிலிருந்து இதுவரை உருப்படியாக ஒரு வேலையும் செய்யவில்லை’

 • 2

  ஒழுங்காக.

  ‘இந்த நகரில் உருப்படியாக ஒரு சாலைகூட இல்லை’