தமிழ் உருப்படு யின் அர்த்தம்

உருப்படு

வினைச்சொல்உருப்பட, உருப்பட்டு

 • 1

  (வாழ்க்கையில்) நல்ல நிலை அடைதல்.

  ‘ஒழுங்காகப் படித்தால்தான் நீ உருப்படுவாய்’
  ‘பையன் உருப்படுவதற்கு நான் என்ன என்னவோ செய்துபார்த்துவிட்டேன்’
  ‘வாரத்தில் இரண்டு நாள்கூட வேலைக்குப் போகாத நீ எப்படி உருப்படுவாய்?’
  ‘அவரோடு கூட்டு சேர்ந்தவன் எவனும் உருப்பட்டதில்லை’

 • 2

  (திட்டம், ஒப்பந்தம் முதலியன) நிறைவேறி நடைமுறைக்கு வருதல்.

  ‘இவ்வளவு செலவாகும் என்றால் இந்தத் திட்டம் உருப்படுவதே சந்தேகம்’