தமிழ் உருளை யின் அர்த்தம்

உருளை

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  நீள் உருண்டை (வடிவம்).

  ‘உருளை வடிவப் பீப்பாய்’

 • 2

  நீள் உருண்டை வடிவில் உள்ள பொருள்.

  ‘உலோக உருளையின் மேல் வைத்த பலகை மீது யானை ஏறி நின்றது’
  ‘தட்டச்சுப்பொறியின் உருளை’

 • 3

  உருளைக்கிழங்கு.

  ‘தோட்டத்திலிருந்து வந்த உருளை மூட்டைமூட்டையாக ஒரு மூலையில் கிடந்தது’
  ‘உருளை விலை கடுமையாக உயர்ந்துள்ளது’