தமிழ் உருவகப்படுத்து யின் அர்த்தம்

உருவகப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    உருவகமாகக் கூறுதல்.

    ‘இந்தப் பாடலில் மனைவி ‘குயில்’ என்று உருவகப்படுத்தப்படுகிறாள்’

  • 2

    இப்படித்தான் இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்று கற்பனையாகத் தீர்மானித்தல்.

    ‘வாழ்க்கை என்றால் பொதுவாக மனைவி, மக்கள், வீடுவாசல், சொத்து என்றுதான் நாம் உருவகப்படுத்திக்கொள்கிறோம்’