தமிழ் உருவாக்கு யின் அர்த்தம்

உருவாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

 • 1

  (புதிதாக அல்லது புதிய முறையில் ஒன்றை) அமைத்தல்; நிர்மாணித்தல்/(புதிய மதம், கட்சி போன்றவற்றை) தோற்றுவித்தல்.

  ‘இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் வானில் செலுத்தப்பட்டது’
  ‘மாமல்லபுரக் கோயில்களையும் சிற்பங்களையும் உருவாக்கிய சிற்பிகள் யாரோ!’
  ‘அரும்பாடுபட்டு அவர் உருவாக்கிய கட்சி இன்று உட்பூசலால் ஆட்டம் கண்டுவிட்டது’
  உரு வழக்கு ‘அவன் தனக்கென்று ஒரு வாழ்க்கைப் பாதையை உருவாக்கிக்கொண்டான்’

 • 2

  (ஒருவர் தன் முயற்சியால் குறிப்பிட்ட துறையில் அல்லது முறையில் மற்றொருவரை) வெளிக்கொண்டு வருதல்.

  ‘சிறந்த மாணவர்களை உருவாக்கிய ஆசிரியர்’
  ‘வழூவூர் நடன பாணியில் அவர் உருவாக்கிய மாணவர்’

 • 3

  (விதிமுறை, கருத்து, உணர்ச்சி முதலியவற்றை) உண்டாக்குதல்; ஏற்படுத்துதல்.

  ‘மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு அரசு பல திட்டங்களை உருவாக்கியுள்ளது’