தமிழ் உருவு யின் அர்த்தம்

உருவு

வினைச்சொல்உருவ, உருவி

 • 1

  (இறுக்கமான ஒன்றிலிருந்து ஒரு பொருளை எடுத்தல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (கட்டப்பட்டதிலிருந்து அல்லது பற்றிக்கொண்டிருக்கும் ஒன்றிலிருந்து ஒன்றை) பலமாக இழுத்தல்

   ‘பத்திரிகை போடும் பையன் கட்டிலிருந்து ஒரு பத்திரிகையை உருவி வீட்டின் முன் எறிந்துவிட்டுப் போனான்’
   ‘கொள்ளைக்காரன் கத்தியை உருவுவதற்கும் அவர் சுடுவதற்கும் சரியாக இருந்தது’
   ‘கொடியிலிருந்த துண்டை உருவித் தோளில் போட்டுக்கொண்டார்’
   உரு வழக்கு ‘அவனிடமிருந்து எப்படியோ பணத்தை உருவிவிட்டாயே’

 • 2

  (விரல்களை மேலிருந்து கீழ் நோக்கி ஒரு பரப்பின் மீது ஓட்டுதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (விரலால்) அழுத்தித் தடவுதல்; பிடித்து நீவுதல்

   ‘சுளுக்குப் பிடித்திருந்த இடத்தை அவன் மெதுவாக உருவிவிட்டுக்கொண்டான்’
   ‘ஆழ்ந்த யோசனையுடன் தாடியை உருவிவிட்டுக்கொண்டார்’

  2. 2.2 (காம்பில் இருக்கும் இலை, கதிரில் உள்ள நெல் போன்றவற்றை விரல்களால்) இழுத்து ஒன்றாக எடுத்தல்

   ‘கறிவேப்பிலையை உருவிப் போட்டு அவள் தாளித்தாள்’
   ‘அகத்திக் கீரையை உருவிக் கொடு’

  3. 2.3 (கயிறு முதலியவற்றை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு கீழே) சரிந்து இறங்குதல்

   ‘வரிக்கயிற்றில் உருவிக்கொண்டு கிணற்றில் இறங்கினார்கள்’