உரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உரை1உரை2உரை3

உரை1

வினைச்சொல்உரைக்க, உரைத்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு தெரிவித்தல்; கூறுதல்.

  ‘இந்த ஆய்வுப் பணியை முடிக்க இவ்வளவு காலம் ஆகும் என்று அறுதியிட்டு உரைக்க இயலாது’

உரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உரை1உரை2உரை3

உரை2

வினைச்சொல்உரைக்க, உரைத்து

 • 1

  (தங்கத்தின் தரம் அறியும் பொருட்டு) தேய்த்தல்.

  ‘எந்த நகையை விற்கச் சென்றாலும் உரைத்துப் பார்க்காமல் வாங்க மாட்டார்கள்’

 • 2

  (சுக்கு முதலியவற்றைக் கல்லில்) உரசுதல்.

  ‘வசம்பை உரைத்துப் பாலில் கலந்து குழந்தைக்குக் கொடு’

உரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உரை1உரை2உரை3

உரை3

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும், எழுதிப் படிக்கப்படும்) பேச்சு.

  ‘தொழிலாளர் தினத்தன்று நிகழ்த்தப்போகும் உரையைத் தலைவர் எழுதிக்கொண்டிருக்கிறார்’
  ‘ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்’

 • 2

  (இலக்கிய, இலக்கண நூல்களுக்கு எழுதப்படும்) விளக்கம்.

  ‘தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர்’