தமிழ் உற்சாகம் யின் அர்த்தம்

உற்சாகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (செயலைச் செய்வதற்குக் காட்டும்) ஆர்வம்.

  ‘ஓவியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உற்சாகம் வேண்டிய அளவு இருக்கிறது’
  ‘அவன் எவ்வித உற்சாகமும் இல்லாமல் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான்’

 • 2

  (வெற்றி, எதிர்பார்ப்பு அல்லது நிறைவு போன்ற உணர்ச்சிகளால் ஏற்படும்) மகிழ்ச்சி.

  ‘பள்ளிக்கூடம் விட்டதும் குழந்தைகள் உற்சாகமாக வீட்டுக்கு ஓடினார்கள்’
  ‘தனக்கு வேலை கிடைத்துவிட்டது என்ற செய்தியை அவள் மிகுந்த உற்சாகத்துடன் சொன்னாள்’