தமிழ் உற்பத்தி யின் அர்த்தம்

உற்பத்தி

பெயர்ச்சொல்

 • 1

  (பொருள்) தயாரித்தல்; உண்டாக்குதல்/(பயிர்) விளைவித்தல்.

  ‘புதிய உரத் தொழிற்சாலை அடுத்த மாதத்திலிருந்து உற்பத்தியைத் துவக்கும்’
  ‘நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனை புரிந்திருக்கிறது’

 • 2

  (நபரால் அல்லது இயந்திரத்தால்) தயாரிக்கப்பட்டது; உண்டாக்கப்பட்டது.

  ‘மலைவாசிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களைச் சமவெளிக்குக் கொண்டுவந்து விற்பார்கள்’
  ‘அமெரிக்கச் சந்தையில் ஜப்பான் நாட்டு உற்பத்திப் பொருள்கள் குவிக்கப்படுகின்றன’

 • 3

  (கிருமிகள், நோய் போன்றவை) பெரும் அளவில் உண்டாதல்.

  ‘தேங்கியிருக்கும் சாக்கடையில் கொசு உற்பத்தி’
  ‘நோய் உற்பத்தி’