தமிழ் உற்பத்தியாகு யின் அர்த்தம்

உற்பத்தியாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

 • 1

  (நதி ஓர் இடத்திலிருந்து) தோன்றுதல்; ஆரம்பித்தல்.

  ‘இதுதான் கங்கை உற்பத்தியாகும் இடம்’

 • 2

  (சக்தி) உண்டாதல்.

  ‘சூரிய மின்கலங்களில் மின்சக்தி உற்பத்தியாகிறது’
  ‘நெருப்புக் கோளமான சூரியனிலும் சக்தி உற்பத்தியாகிறது’

 • 3

  (பொருள்கள்) தயாரிக்கப்படுதல்; உண்டாதல்; (பயிர்) விளைதல்.

  ‘இந்தக் கருவி உற்பத்தியாகி வெளிவருவதற்குள் பல முறை சோதனை செய்யப்படுகிறது’
  ‘தேயிலை நம் நாட்டில் உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுகிறது’
  ‘உற்பத்தியாகும் மொத்த சங்குகளில் நடுத்தரமானவைதான் மிகவும் அதிகம்’

 • 4

  (உடலில் கிருமிகள், சுரப்புகள், நோய்கள் போன்றவை) உண்டாதல்.

  ‘உடலில் கொழுப்பு அதிக அளவில் எரிக்கப்படும்போது ஒருவித அமிலப் பொருள் அதிக அளவில் உற்பத்தியாகிறது’
  ‘சிறுகுடலை அடையும் உணவு கல்லீரலிலிருந்து உற்பத்தியாகும் பித்தநீராலும் கணையத்திலிருந்து உற்பத்தியாகும் திரவத்தாலும் அரைக்கப்படுகிறது’
  ‘கொசு உற்பத்தியாவதைத் தடுக்க மருந்து தெளிக்க வேண்டும்’