தமிழ் உறவு யின் அர்த்தம்

உறவு

பெயர்ச்சொல்

 • 1

  (பிறந்த குடும்பத்தின் மூலமாகவோ திருமணத்தின் மூலமாகவோ ஏற்படும்) சொந்தம்.

  ‘எப்போதும் உறவிலேயே பெண்பார்த்துத் திருமணம் செய்துகொள்கிறோம்’
  ‘அவர் நமக்குத் தூரத்து உறவுதான்’

 • 2

  (தனிநபர்கள், இனங்கள் போன்றவற்றுக்கு இடையே நிலவும்) உணர்வுபூர்வமான நெருக்கம்.

  ‘மனித உறவுகளுக்கு இடையில் ஏன் இவ்வளவு சிக்கல்?’
  ‘கடன் அநேகமாக எல்லோருடைய விஷயத்திலும் உறவைப் பாதித்திருக்கிறது’
  ‘தமிழர்-சிங்களவர் உறவு குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன’

 • 3

  (ஒரு அமைப்பு, துறை போன்றவற்றின் பல பிரிவுகளுக்கு இடையே) செயல்ரீதியான துறை சார்ந்த அல்லது ராஜியத் தொடர்பு.

  ‘நிதி அமைச்சகத்துக்கும் சமூகநலன் அமைச்சகத்துக்கும் இடையே உள்ள சுமுகமான உறவுகள்தான் இந்தத் திட்டத்தின் வெற்றிக்குக் காரணம்’

 • 4

  (இரண்டு மாநிலங்களுக்கு அல்லது நாடுகளுக்கு இடையிலான) துறை சார்ந்த தொடர்பு.

  ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வணிக உறவுகள் மேம்படுவது அவசியம்’
  ‘இந்த மாநாடு இந்திய- சீன இலக்கிய உறவுகளை வலுவாக்கும்’
  ‘இந்தியாவுக்கும் அரபு நாடுகளுக்குமான உறவுகள் நீண்ட வரலாறு கொண்டவை’

 • 5

  (ஏதேனும் ஒரு பொதுத் தன்மையின் அடிப்படையில் ஏற்படும்) பிணைப்பு.

  ‘மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள உறவை எப்படி விவரிப்பது?’
  ‘உலகத்தோடு தனக்கு இருந்த உறவை உதறிவிட்டுத் துறவியானார்’
  ‘கலைக்கும் யதார்த்தத்துக்கும் உள்ள உறவு சிக்கலானது’
  ‘சிந்தனைக்கும் தர்க்கத்திற்கும் இடையில் உள்ள உறவு பிரிக்க முடியாதது’
  ‘தமிழும் மலையாளமும் உறவுடைய மொழிகள்’
  ‘பரிணாம வளர்ச்சி ரீதியில் மனிதனுக்கும் சிம்பன்ஸிக்கும் உறவு உண்டு’

 • 6

  உடலுறவு.

  ‘‘ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்பே உறவு கொள்வது சரிதானா?’ என்று ஒரு மாணவர் கேள்வி கேட்டார்’