தமிழ் உறு யின் அர்த்தம்

உறு

துணை வினைஉற, உற்று

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு ஓர் உணர்ச்சியை அல்லது ஒரு நிலையை அடைதல், பெறுதல் என்னும் பொருளில் குறிப்பிட்ட பெயர்ச்சொற்களோடு இணைந்து வரும் துணை வினை.

  ‘செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியுற்றோம்’
  ‘குழந்தையைக் காணாமல் தவிப்புற்றாள்’
  ‘அவருடைய உணர்ச்சிமயமான பேச்சு எங்களை எழுச்சியுற வைத்தது’

 • 2

  உயர் வழக்கு வினைப்படுத்தும் வினை.

  ‘(எ-டு) கண்ணுறு (=காண்)’
  ‘கேள்வியுறு (=கேள்)’