தமிழ் உறுத்து யின் அர்த்தம்

உறுத்து

வினைச்சொல்உறுத்த, உறுத்தி

 • 1

  தொல்லையான நெருடல் உணர்ச்சி தருதல்.

  ‘கண்ணில் தூசி விழுந்து உறுத்திக்கொண்டேயிருக்கிறது’
  ‘கயிற்றுக் கட்டிலில் துணியை விரித்துப் படுத்தாலும் உறுத்தத்தான் செய்யும்’
  உரு வழக்கு ‘இந்தப் புத்தகத்தின் அச்சுப் பிழைகள் கண்ணை உறுத்துகின்றன’
  உரு வழக்கு ‘நான் வீடு வாங்கியது பலரையும் உறுத்தியிருக்கிறது’

 • 2

  (கடும் சொல், தவறு முதலியவை மனத்தை) வருத்துதல்.

  ‘தவறு செய்துவிட்டோம் என்ற எண்ணமே என்னை உறுத்துகிறது’
  ‘மனைவியுடன் காலையில் நடந்த வாக்குவாதம் மனத்தில் உறுத்திக்கொண்டிருந்தது’

தமிழ் உறுத்து யின் அர்த்தம்

உறுத்து

வினையடை

 • 1

  (‘பார்’, ‘நோக்கு’ போன்ற வினைகளோடு வரும்போது) உற்று.

  ‘அந்த முதியவர் வெகு நேரமாக என்னையே உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்’
  ‘புத்தகத்தில் அப்படி எதைத்தான் உறுத்துப் பார்க்கிறாய்?’