உறுதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உறுதி1உறுதி2

உறுதி1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பொருளின் தன்மையைக் குறிக்கையில்) பலம்; வலிமை.

  ‘இரும்பு போன்று உறுதியான உடல்’
  ‘உறுதியான கட்டடம்’

 • 2

  (கொண்ட கொள்கை, எண்ணம் முதலியவற்றிலிருந்து) மாறாத திடம்; நெகிழாத பிடிப்பு.

  ‘அவர் தாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார், மாற மாட்டார்’
  ‘வாழ்க்கையில் முன்னேறியே தீர்வது என்ற உறுதி சற்றும் தளரவில்லை’

 • 3

  முடிந்த முடிவு; நிச்சயம்.

  ‘என் பணத்தைத் திருடியவன் இவன்தான் என்று உறுதியாகக் கூறினார்’
  ‘இன்று மழை பெய்வது உறுதி’
  ‘அவனது திறமைக்கு விரைவிலேயே வேலை கிடைத்துவிடும் என்பது உறுதி’

 • 4

  வாக்குறுதி; உறுதிமொழி.

  ‘ஒரு மாதத்துக்குள் திருப்பித் தரவேண்டும் என்று உறுதி பெற்றுக்கொண்டு அவன் எனக்குக் கடன் கொடுத்தான்’

உறுதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

உறுதி1உறுதி2

உறுதி2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு பத்திரம்; உரிமைச் சாசனம்.

  ‘காணியை விலைபேசியாகிவிட்டது. உறுதி எழுத வேண்டியதுதான்’