தமிழ் உறுதிமொழி யின் அர்த்தம்

உறுதிமொழி

பெயர்ச்சொல்

 • 1

  நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடப்பதாக அளிக்கும் வாக்கு.

  ‘கிளர்ச்சிகளில் இனி ஈடுபடுவதில்லை என்ற உறுதிமொழி தந்துவிட்டுத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று நிர்வாகம் சொன்னது’
  ‘நன்னடத்தையுடன் நடந்துகொள்வேன் என்னும் உறுதிமொழியைக் குற்றவாளி அளிக்க வேண்டும்’

 • 2

  (நாட்டின் நலன் கருதி ஒருவர் எடுத்துக்கொள்ளும்) சத்தியப்பிரமாணம்.

  ‘இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்போம் என்று அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்’
  ‘மதங்களிடையே நல்லெண்ணத்தை உருவாக்கக் கூட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது’

 • 3

  (அமைச்சர், நீதிபதி போன்றோர் பதவி ஏற்கும்போது எடுத்துக்கொள்ளும்) அதிகாரபூர்வமான பிரமாணம்.

  ‘பதவி ஏற்பு மற்றும் ரகசியக் காப்பு உறுதிமொழிகளை ஆளுநர் படிக்க, அமைச்சர்கள் அவற்றைப் படித்து உறுதிமொழி ஏற்றனர்’
  ‘ஆளுநர் பொறுப்பை ஏற்பதற்கு முன் அந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்’

 • 4

  (வாய்மொழியாகத் தரும்) உத்தரவாதம்.

  ‘எங்கள் கிராமத்திற்குச் சாலை போடப்படும் என்று அமைச்சர் உறுதிமொழி தந்தார்’